அக்மீமண, ருஹுணு தேசிய கல்வியியற் பீட இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 12 பேர் காயமடைந்த நிலையில் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று தற்போது பயிற்சி பெற்று வரும் இறுதி வருட ஆசிரிய மாணவர்கள் குழுவொன்று விஞ்ஞான பீடத்தில் தங்கியிருந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு (26) குறித்த சிரேஷ்ட மாணவர்கள் குழு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்ததாகவும், அதன் பின்னர் அவர்களில் 50 பேர் கொண்ட குழுவொன்று விஞ்ஞான பீட வளாகத்திற்கு வந்து அங்கிருந்த 2ஆம் வருட மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் இரண்டாம் வருட மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சம்பவம் தொடர்பில் பீடாதிபதியின் முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, அக்மீமண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment