அமெரிக்கா பயணமானது இலங்கை குழு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

அமெரிக்கா பயணமானது இலங்கை குழு

(இராஜதுரை ஹஷான்)

கடன் மறுசீரமைப்பு, பொருளாதாரக் கொள்கை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிகள் சர்வதேச நாணய நிதியத்தினதும், உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த மாநாடு இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை (08) அமெரிக்காவின் வாஷிங்டன் நோக்கி சென்றுள்ளனர்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கான கொள்கைத் திட்டங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

முன்னெடுப்படும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான சகல விடயங்களும் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும். இவ் வருட காலத்திற்குள் நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment