சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றும் பொலிஸார் என்றோ ஒரு நாள் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றியமைக்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் தங்கள் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக மக்களின் உரிமைகளை மீறியவர்கள் தங்கள் தவறுகளிற்கான விலைகளை செலுத்தியதை நான் பார்த்திருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இழப்பீடுகளை செலுத்தினர், தங்கள் பதவி உயர்வுகளை இழந்தனர் ஏனையவர்கள் குற்றங்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறைத் தண்டனையை அனுபவித்தனர் என தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் அந்த வேலைளில் அவர்களை காப்பாற்ற அவர்களின் எஜமானர்கள் காணப்படமாட்டார்கள் பொலிஸார் தண்டனைகளை தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment