பதில் பிரதம நீதியரசராக புவனேக அலுவிஹாரே பதவிப்பிரமாணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

பதில் பிரதம நீதியரசராக புவனேக அலுவிஹாரே பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி புவனேக பண்டுகாபய அலுவிஹாரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இப்பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நேற்று (08) முதல் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை வெளிநாடு செல்லும் காலப்பகுதியில் பதில் பிரதம நீதியரசராக பணியாற்றுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி புவனேக அலுவிஹாரேவை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்குப் பாராளுமன்றப் பேரவையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment