எனக்கு தண்டனை வழங்குமாறு சவால் விடுகின்றேன் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

எனக்கு தண்டனை வழங்குமாறு சவால் விடுகின்றேன் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

எனது ஆட்சிக் காலத்தில் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது எதிர்கொள்வதைப் போன்ற நெருக்கடிகளை அன்று மக்கள் எதிர்கொள்ளவில்லை ன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில், வருடத்திற்கொருமுறை சர்வதேச கணக்காய்வாளர்கள் வருகை தந்து முன்னாள் ஜனாதிபதிகளினுடைய வீடுகளிலுள்ள பொருட்கள் தொடர்பில் சோதனைகளை முன்னெடுப்பர். ஆனால் கடந்த மூன்றரை வருடங்களில் அவ்வாறு எந்த செயற்பாடும் இடம்பெறவில்லை.

கதிர்காமத்திலுள்ள உத்தியோகபூர்வ ஜனாதிபதி இல்லத்தில் காணப்பட்ட சுமார் 3 கோடி பெருமதியுடைய தொலைக்காட்சிகள் இரண்டும், அநுராதபுரத்திலுள்ள உத்தியோகபூர்வ ஜனாதிபதி இல்லத்தில் காணப்பட்ட தொலைக்காட்சியொன்றும் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.

தொலைக்காட்சிகளை எடுக்குமளவிற்கு எனது பொருளாதார நிலைமை மோசமடையவில்லை. என்னிடம் அந்தக் கொள்கையும் கிடையாது.

நான் அமைச்சராக பதவி வகித்த காலத்திலும், ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் அரச சொத்துக்களில் ஒரு சதமேனும் மோசடி செய்திருந்தால் எனக்கு தண்டனை வழங்குமாறு சவால் விடுக்கின்றேன்.

நாம் எமது செயற்பாடுகளை நேர்மையாகச் செய்தால் எதிர்பார்க்கும் இடத்திற்குச் செல்ல முடியும். தற்போது எமக்குள்ள பிரதான பிரச்சினை நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பதாகும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்களில் 70 சதவீதமானோர் பாரதூரமான மோசடிகளிலேயே ஈடுபடுகின்றனர். எனவே தற்போது பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இன்று பாராளுமன்றம் ஒருபுறத்திலும், மக்கள் பிரிதொரு புறத்திலும் இருந்து செயற்படுகின்றனர். தற்போதுள்ள 225 பேரில் குறைந்தபட்சம் 100 பாராளுமன்ற உறுப்பினர்களாவது சிறந்த கல்வி அறிவுடைய நிபுணத்துவம் மிக்கவர்களாகக் காணப்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்புவது இலகுவானதாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment