இப்போதைய சூழ்நிலையில் யாரை நம்பி யாருடன் இணைந்து சமூகப் பணியாற்றுவது என்ற அச்சம் எழுந்துள்ளது : சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆஷிக் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

இப்போதைய சூழ்நிலையில் யாரை நம்பி யாருடன் இணைந்து சமூகப் பணியாற்றுவது என்ற அச்சம் எழுந்துள்ளது : சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆஷிக்

தனித்தனியாக நின்று சமூகப் பணியாற்றுவதை விட ஒருமித்து நின்று சமூகப் பணியாற்றுவது சிறந்தது. ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் யார் நல்லவர்கள், யார் சமூக நலன் கொண்டவர்கள், தீய சக்திகள் யார் என யாரை நம்பி யாருடன் இணைந்து சமூகப்பணியாற்றுவது என்ற அச்சம் எழுந்துள்ளது தவிர்க்க முடியாதது. ஒரு அணியாக நின்று சமூக தேவைகளை நிறைவேற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தெரிவித்தார்.

சாய்ந்தமருது ஐக்கிய சமூக முன்னணியின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும், மேலங்கி அறிமுக நிகழ்வும் அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜீ. அன்வர் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பெயரளவுக்கும், சொந்த மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கும் சிலர் அமைப்புக்களை பதிவு செய்கிறார்கள். அவர்களின் செயற்பாடு யாருடைய நிதியையாவது பெறுவதாகவே அமைந்துள்ளது.

பிரதேச வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுப் பணிகளுக்கு அழைத்தால் ஏறத்தாழ 90 பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள் இருக்கும் சாய்ந்தமருதில் 20 அமைப்புக்களே கலந்து கொள்கிறார்கள்.

பொது அமைப்புக்களின் சம்மேளனத்தை நிறுவி அதனூடாக பல்வேறு அவசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இந்த வேலைத்திட்டம் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் வெற்றியளித்துள்ளது என்றார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல், அல்- அமானா நற்பணிமன்ற தலைவர் ஏ.எல். பரீட் ஹாஜி, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளரும், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியுமான ஏ. அமீர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.சபீர் உட்பட கல்விமான்கள், முக்கிய பிரமுகர்கள், சாய்ந்தமருது ஐக்கிய சமூக முன்னணியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் இந்நிகழ்வில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

No comments:

Post a Comment