பயங்கரவாத தடுப்புப் பிரிவு அவசியம் : இலங்கை கடற்பரப்பு ஊடாக தாக்குதலுக்கு வாய்ப்பு - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

பயங்கரவாத தடுப்புப் பிரிவு அவசியம் : இலங்கை கடற்பரப்பு ஊடாக தாக்குதலுக்கு வாய்ப்பு - உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல்

இலங்கையின் கடற்பரப்பினூடாக இடம்பெறக் கூடிய பயங்கரவாத சாத்தியக் கூறுகளை சமாளிப்பதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவொன்றை அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி பி.ஜெகன்நாத் என்பவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை, பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும் செயற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் பாகிஸ்தான் -, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து இந்தியாவை தாக்கக் கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மாநில அரசாங்கத்தை இழிவுப்படுத்துதல், வதந்தியை பரப்புதல் மற்றும் அச்சத்தை ஏற்படுத்துதல் என்பவற்றுக்காக இப் பொது நல வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லையென்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment