தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, October 10, 2022

தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் அங்கத்தவர்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநாயகருக்குக் கடிதமொன்றை கையளித்துள்ளது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்தக் கடிதத்தை கையளித்தார்.

தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணைக்கு அமைய இதுவரை உரிய 35 அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் 28 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதில் உள்ளடப்பட்டுள்ள பெண் உறுப்பினர் பவித்ரா வன்னிஆரச்சி ஆவார்.

எனவே, தேசிய பேரவையின் ஏனைய அங்கத்தவர்களை பெயர் குறிப்பிடும் போது பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இந்தக் கடித்தம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment