சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு மக்களின் முட்டாள்த்தனமான மனப்பான்மையே தடையாக உள்ளது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்
சண்டே ஓப்சேவரிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரை விட அதிகளவு மக்களை கவரும் இடங்களை கொண்ட இலங்கையால் ஏன் சுற்றுலாப் பயணிகளை கவர முடியவில்லை என்ற கேள்விக்கே டயனா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எங்களின் முட்டாள்த்தனமான மனோநிலை காரணமாக எங்களால் சிங்கப்பூர் போல சுற்றுலாப் பயணிகளை கவர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையே நான் தெரிவிக்க முயல்கின்றேன் சிங்கப்பூர் என்பது சிறிய நாடு அவர்களிடம் என்ன இருக்கின்றது எங்களிற்கு கடவுளும் இயற்கையும் கொடுத்த விடயங்களில் ஏதாவது கால்வாசியாவது அவர்களிடம் உள்ளதா? நிச்சயமாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் பல விடயங்கள் உள்ளன நாங்கள் அதனை பயன்படுத்துவதில்லை. நாங்கள் நாட்டை திறக்க வேண்டும், மக்கள் சென்று மகிழ்வதற்கான 247 இடங்களை இலங்கையில் திறக்க விரும்புகின்றேன்.
சுற்றுலாப் பயணிகள் மாத்திரம் அனுபவிக்கின்றனர் என கருத வேண்டாம். உள்ளுர் மக்களும் சென்று அனுபவிப்பதற்கான இடங்கள் இல்லாமல் உள்ளனர் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் எதுவும் இல்லாததால் மக்கள் பணத்தை டொலரை எடுத்துக் கொண்டு வேறு நாடுகளிற்கு அனுபவிக்க செல்கின்றனர். இங்கு எதுவும் இல்லாததால்தான் அவ்வாறு செல்கின்றனர் இதுவே காரணம் நாங்கள் இதனை தடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment