இந்தியாவில் குறைந்தது 9 பேரை வேட்டையாடி கொன்ற புலி ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
புலியைத் தேடி அதனைப் பிடிக்கும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 200 பேர் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் சம்பரான் மாவட்டத்தில் உள்ள வால்மிகி வனப் பகுதியில் சுற்றித்திரிந்த புலி கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பலரை அது தாக்கியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், ஒரு பெண் அவரது எட்டு வயது மகன் உட்பட ஆறு பேர் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் வனத்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாகக் காட்டுக்குள் நுழைந்தனர். ஆறு மணி நேரம் கழித்து புலி சுட்டுக் கொல்லப்பட்டது.
இந்தியாவில் 2014 லிருந்து 2019 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 225 பேர் புலிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
2012 க்கும் 2018 க்கும் இடைப்பட்ட காலத்தில் 200 க்கும் மேற்பட்ட புலிகள் சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டன அல்லது மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
உலகின் 70 வீதமான புலிகள் இந்தியாவில் வாழ்கின்றன. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி இவற்றின் எண்ணிக்கை 2,967 என மதிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment