மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு

பிரித்தானிய மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ரோயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டுள்ளது.

டிசம்பரில் இருந்து புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் நாணயங்கள் மக்கள் புழக்கத்திற்காக விடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்குப் பின்பு அவரின் மகன் மூன்றாம் சார்ள்ஸ் மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அதனையடுத்து இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நாணயம் அதிகாரபூர்வமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறப்பைக் குறிக்கும் வகையில் புதிய 5 பவுண்ஸ் நாணயம் மற்றும் 50 பவுண்ஸ் நாணயத்தில் மகாராணியின் உருவம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸால் உருவாக்கப்பட்ட சார்ள்ஸின் உருவத்தை அவரே தனிப்பட்ட முறையில் அங்கீகரித்தார்.

No comments:

Post a Comment