ஐந்து கோடி ரூபா கொக்கைன் கடத்தல் முயற்சி முறியடிப்பு : விழுங்கிய நிலையில் வந்த விவசாயி கைது : கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 29, 2022

ஐந்து கோடி ரூபா கொக்கைன் கடத்தல் முயற்சி முறியடிப்பு : விழுங்கிய நிலையில் வந்த விவசாயி கைது : கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி

சுமார் 05 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப் பொருளை உருண்டைகளாக விழுங்கி நாட்டுக்குள் கடத்த முற்சித்த உகண்டா பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் இவரை கைது செய்ததாக சுங்கப் பேச்சாளரும், சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளருமான (சட்ட விவகாரங்கள்) சுதத் சில்வா தெரிவித்தார்.

உகாண்டாவைச் சேர்ந்த 43 வயதான விவசாயி ஒருவரே, இச்சம்பவத்தில் கைதானார்.

சந்தேக நபர் உகாண்டாவிலிருந்து கட்டார், டோஹாவை சென்றடைந்து, அங்கிருந்து கட்டார் ஏர்வேஸ் KR-664 விமானம் மூலம் நேற்று முன்தினம் (28) காலை 09.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நபர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் வாயிலுக்கருகில் வைத்து அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

இவரை விமான நிலைய ஸ்கேனிங் இயந்திரத்தில் சோதனை செய்தபோது வயிற்றில் கொக்கேயின் போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை சுங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலும் விசாரித்தனர். 

சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 80 கொக்கேயின் உருண்டைகளை விழுங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, கொக்கேயின் உருண்டைகள் அவரது வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன.

No comments:

Post a Comment