ஊன நிலைக்கு ஆளான பிள்ளைக்கு 30 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு ! கம்பஹா மாவட்ட வைத்தியசாலை வைத்திய பணிக் குழுவின் அலட்சியமே காரணம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 29, 2022

ஊன நிலைக்கு ஆளான பிள்ளைக்கு 30 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு ! கம்பஹா மாவட்ட வைத்தியசாலை வைத்திய பணிக் குழுவின் அலட்சியமே காரணம்

மகப்பேற்றுக்காக கம்பஹா அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய் ஒருவர் வலது குறைந்த பிள்ளையொன்றை பெற்றெடுத்துள்ளமைக்கு மருத்துவர்களின் கவனயீனமே காரமென தெரிவித்து அதற்காக வலது குறைந்த பிள்ளைக்கு 30 மில்லியன் ரூபாவை அரசாங்கம் நட்ட ஈடாக வழங்க வேண்டுமென கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அரசாங்கத்திற்கு நேற்று அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

பியகய பிரதேசத்தைச் சேர்ந்த சந்துணி அனாஷா என்ற வலது குறைந்த குழந்தை அதன் தாயாரை உதவியாளராக பெயரிட்டு தாக்கல் செய்துள்ள வழக்குக்கு நீண்ட விசாரணைகளுக்கு பின்னர் நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி கல்ஹாரி லியனகே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 2012ஆம் ஆண்டு பிரசவ அறையில் ஒன்றுக்கு உதவிய வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட, பணிக் குழுவினருக்கே கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி கல்ஹாரி லியனகே உத்திரவிட்டார்.

குழந்தை பிரசவத்தின்போது அக்குழந்தையின் தொப்புள் கொடி கழுத்து பகுதியை சுற்றி இறுகிள்ளதை அறிந்திருந்தும், சுகப்பிரசவம் ஊடாக அக்குழந்தையை பிரசவிக்கச் செய்தமையால் அக்குழந்தை நிரந்தர ஊனமுற்ற நிலைக்கு ஆளாகியமையை அவதானித்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

பிரசவம் தொடர்பில் செயற்பட்ட வைத்தியர்களும், பணிக்குழுவினரும், குழந்தையின் கழுத்து பகுதியை தொப்புள் கொடி சுற்றி இறுக்கி சுவாசம் தடைப்படுவதை அறிந்திருந்தும், அது தொடர்பில் மேலதிக பரிசோதனை எவற்றையும் முன்னெடுக்காது, சுக பிரசவத்துக்கு இடமளித்தமையால் ஒட்சிசன் குறைந்து குழந்தையின் கழிவுகள் வெளியேறி மூளையின் செயற்பாடு குறைவடைந்துள்ளமை தொடர்பில் சாட்சி ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தீர்மானித்த நீதிபதி இந்த தீர்ப்பை அறிவித்தார்.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் இந்த வழக்கின் தீர்ப்பை மனுதாரருக்கு சாதகமாக வழங்குவதாகவும், பிள்ளையின் எதிர்கால வாழ்வை கருத்திற் கொண்டு அவருக்கு தனது வாழ்வை முன்னெடுக்க இந்த பணத் தொகையை செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் பிறந்த சந்துனி ஆகாஷ் எனும் முறைப்பாட்டாளரான பெண் பிள்ளை மற்றும், அவரது தாயார் இவ்வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் பணிக்குழுவினர் வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

அக்கால பகுதியில் சேவையாற்றிய வைத்தியசாலை பணிக்குழுவினரின் அலட்சியமான நடவடிக்கை காரணமாக தற்போது தனது பிள்ளைக்கு வாய் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கை, கால்களை அசைக்க முடியாமல் தொடர்ச்சியாக வலிப்பு நிலைக்கு முகம் கொடுப்பதாகவும் அதனால் அவரால் சாதாரண நபராக வாழ்வதற்கு முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் மனு ஊடாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் வைத்திய சான்றுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment