புதிய கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Friday, June 3, 2022

புதிய கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை - விமல் வீரவன்ச

முற்போக்கு கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து உருவாக்க திட்டமிட்டுள்ள புதிய கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியின் தலைவராக தனது பெயரை முன்மொழிவதற்கு வாசுதேவ நாணயக்காரர் தயாராக உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் உருவாக்கவுள்ள புதிய கூட்டணியின் பெயர் தலைமைத்துவம் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள சமூக அரசியல் நெருக்கடிகள் குறித்து கட்சியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் மக்களிற்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஆராய்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீய நோக்கம் கொண்ட மூன்றாம் தரப்பினரால் எதிர்பார்த்துள்ள சூழ்நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மக்கள் புத்திசாலித்தனத்துடன் செயற்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment