இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு நாளொன்றுக்கு இரண்டரை கோடி ரூபா நஷ்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 3, 2022

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு நாளொன்றுக்கு இரண்டரை கோடி ரூபா நஷ்டம்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு நாளொன்றுக்கு ஏற்படும் நஷ்டத்தின் தொகை இரண்டரை கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கை புகையிரத திணைக்களமானது, நாளொன்றுக்கு 40 மில்லியன் ரூபாவை டீசலுக்காக செலவிடுகின்ற போதிலும், நாளாந்தம் எமக்கு 15 மில்லியன் ரூபா மாத்திரமே வருமானமாக கிடைக்கிறது.

பொது போக்கு வரத்து சேவைகளில் எமது திணைக்களமானது இன்றியமையாத சேவையை வழங்கி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புகையிரத திணைக்களம் நாளாந்தம் நஷ்டத்தை எதிர்கொண்டுவரும் சூழ்நிலையில், ரயில் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும், போக்குவரத்துக்கான கட்டணத்தை உயர்த்தாவிடின் புகையிரத திணைக்களம் பெரும் நெருக்கடிக்குள்ளாகும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment