அதிவேக வீதியில் பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய பாராளுமன்ற உறுப்பினரின் மகன் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 2, 2022

அதிவேக வீதியில் பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய பாராளுமன்ற உறுப்பினரின் மகன்

தெற்கு அதிவேக வீதியில் பெத்திகமவிலுள்ள இடம்மாறும் இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் பெத்திகம இடம்மாறும் பகுதியூடாக முறையற்ற வகையில் தனது வாகனத்தில் குளிர்சாதனப் பெட்டியை கொண்டு செல்ல முற்பட்ட நிலையில், பொலிஸார் அவ்வீதி வழியே குளர்சாதனப் பெட்டியை கொண்டுசெல்ல முடியாது எனவும் வாகனத்தை பின்னுக்கு எடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினரின் மகன் அங்கிருந்த பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அதாவது, பாதுகாப்பற்ற முறையில் குளிர்சாதனப் பெட்டி ஒன்றை ஏற்றி வந்த வாகனத்தை தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் இடம் மாறும் இடத்தில் பொலிஸார் நிறுத்தினார்கள்.

இந்நிலையில், பாதுகாப்பற்ற முறையில் குளிர்சாதனப் பெட்டியுடன் பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்பதால், அதிவேக வீதிக்குள் நுழைய வேண்டாம் என பொலிஸார் சாரதிக்கு அறிவுறுத்தினார்.

ஆனால் சாரதியும், வாகனத்தில் இருந்த ஒரு பெண்ணும் பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர்.

பின்னர், வாகனத்தை செலுத்தியவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வாகனத்தில் வேகமாக பின்னோக்கிச் சென்று சம்பவ இடத்தில் இருந்து வெளியேறினார்.

சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி முறைப்பாடு செய்துள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment