இலங்கை அணிக்கு பந்துவீச்சு மூலோபாய பயிற்சியாளராக லசித் மலிங்க நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 2, 2022

இலங்கை அணிக்கு பந்துவீச்சு மூலோபாய பயிற்சியாளராக லசித் மலிங்க நியமனம்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் மற்றும் T20I அணியின் முன்னாள் தலைவருமான லசித் மலிங்கவை பந்துவீச்சு மூலோபாய பயிற்சியாளராக (Bowling Strategy Coach) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதான இலங்கை தேசிய அணியின் பந்துவீச்சு மூலோபாய பயிற்சியாளராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மலிங்க, இலங்கையின் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிப்பதோடு, தந்திரோபாய நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி, மூலோபாய திட்டங்களை களத்தில் செயல்படுத்த உதவுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலிங்கவின் பரந்த அனுபவமும், புகழ்பெற்ற டெத் பந்துவீச்சு நிபுணத்துவமும், இந்த முக்கியமான தொடருக்கு அணிக்கு பெரிதும் உதவும் என்று இலங்கை கிரிக்கெட் நம்புவதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment