மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 2, 2022

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 50 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 நோயாளர்களும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 நோயாளர்களும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 நோயாளர்களும், செங்கலடி, களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 03 நோயாளர்களும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களும், வெல்லாவெளி, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 01 நோயாளருமாக மொத்தமாக 50 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை வாழைச்சேனை, காத்தான்குடி, வவுனதீவு, வாகரை, ஓட்டமாவடி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரை 513 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடத்தில் மாத்திரம் 02 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதிக டெங்கு நோயாளர்களை இனங்கண்ட பிரிவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு இனங்காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment