கடல் பயணங்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 2, 2022

கடல் பயணங்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம் ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் அவ்வப்போது மழை அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆகையினால், கடல் பயணங்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் கொந்தளிப்பு முதல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பு வரை காணப்படும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

No comments:

Post a Comment