ஐக்கிய தேசிய கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுமாறு பாலிதவுக்கு பிரதமர் ரணில் ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Friday, June 3, 2022

ஐக்கிய தேசிய கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுமாறு பாலிதவுக்கு பிரதமர் ரணில் ஆலோசனை

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் முழு நேர அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுமாறு அதன் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமை வகிக்கவுள்ளார். அண்மையில் ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டங்களில் தான் முழுமையாக ஈடுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், கட்சியின் அரசியல் செயற்பாடுகளும் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமர் வழங்கிய ஆலோசனைகளுக்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார எதிர்வரும் தினங்களில் முழுமையாக கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment