(எம்.ஆர்.எம்.வசீம்)
தொழில் திணைக்களத்தில் வாரத்துக்கு நான்கு நாட்கள் மாத்திரமே பணி இடம்பெறும். நாளை முதல் வெள்ளிக்கிழமை நாளில் மூடப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொழில் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மற்றும் அனைத்து பிரதேச காரியாலயங்களும் நாளை 3 ஆம் திகதி முதல் வாரத்தில் அனைத்து வெள்ளிக்கிழமை தினத்திலும் மூடப்பட்டிருக்கும் என தொழில் ஆணையாளர் நாயகம் ஜென்ரல் பீ்.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்கொண்டு நெருக்கடி, வளப்பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்டு அரச செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கு, அரச நிறுவனங்களின் சேவையாளர்களை வேலைக்கு அழைப்பதை வரையறுப்பதற்காக, அரச நிர்வாகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் சுற்று நிருபத்துக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.
எனவே தொழில் திணைக்களத்தின் சேவையை பெற்றுக் கொள்ளும் சேவை பெறுநர்கள் வெள்ளிக்கிழமைகளில் தொழில் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் அல்லது பிரதேச காரியாலங்களுக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆணையாளர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment