அரச ஊழியர்கள் 5 வருட சம்பளமற்ற விடுமுறை பெறுவதிலான இறுக்கங்கள் தளர்வு : சிரேஷ்டத்துவம், ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாமல் சுற்றறிக்கையில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 14, 2022

அரச ஊழியர்கள் 5 வருட சம்பளமற்ற விடுமுறை பெறுவதிலான இறுக்கங்கள் தளர்வு : சிரேஷ்டத்துவம், ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாமல் சுற்றறிக்கையில் மாற்றம்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அல்லது ஏனைய பயனுள்ள பணிகளுக்காக, அரச ஊழியர்களுக்கு 5 வருடங்களுக்கு சம்பளம் அற்ற (No Pay) விடுமுறை பெறும் நடவடிக்கையை இலகுவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றையதினம் (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுள்ள பணிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக் காலத்தில் உச்சபட்சம் 5 வருடங்கள் சம்பளமற்ற விடுறையைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது ஏற்பாடுகளின் பிரகாரம் இயலுமை உள்ளது.

ஆயினும், குறித்த காலப்பகுதியில் ஓய்வூதியக் கணிப்பைக் கருத்தில் கொள்ளாமை, சிரேஷ்டத்துவம் பாதிக்கப்படுகின்றமை உள்ளிட்ட ஏனைய காரணிகளால் அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறான விடுமுறையைப் பெறுவதில் ஆர்வம் காட்டாமலிருப்பதாக அறிய வந்துள்ளது.

அதற்கமைய, அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், சம்பளமற்ற விடுறையைப் பெறுவது தொடர்பான தற்போதுள்ள ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகள் வருமாறு


No comments:

Post a Comment