லங்கா IOC நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் விநியோக மட்டுப்பாடு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 8, 2022

லங்கா IOC நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் விநியோக மட்டுப்பாடு

நாளை (09) முதல் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதாக லங்கா IOC (LIOC) நிறுவனமும் அறிவித்துள்ளது.

அதற்கமைய ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அண்மையில் (மே 05) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முறைமைக்கு அமைய LIOC நிறுவனமும் தங்களது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய,
மோட்டார் சைக்கிள் : ரூ. 2,000
முச்சக்கர வண்டி : ரூ. 3,000
கார், வேன், ஜீப் : ரூ. 8,000

பஸ், லொறி, வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment