வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் படைத் தளபதிகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 26, 2022

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் படைத் தளபதிகள்

நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹாணை பிரதேசத்திலும், இம்மாதம் 9 ஆம் திகதி நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகளின் போது ஏதேனுமொரு வகையில் முப்படையினர் அசமந்த போக்குடன் செயற்பட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட குவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் படைத் தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.

கடற்படையின் Admiral of the Fleet வசந்த கரன்னாகொட இந்த குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.

ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப் படையின் Marshal of the Air Force ரொஷான் குணதிலக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையோரிடம் நாளை (இன்று) (27) முதல் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment