தரமற்ற எரிபொருள் விநியோகம் : முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 2, 2022

தரமற்ற எரிபொருள் விநியோகம் : முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கம்

தரமற்ற எரிபொருள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சந்தேகங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தெரிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 011 5455130 அல்லது 011 5234234 ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மண்ணெண்ணெய்யுடன் டீசலை கலப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளைக் கலந்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment