குரங்கு அம்மை நோய்ப்பரவல் : முதல் நாடக தனிமைப்படுத்தலை அறிவித்தது பெல்ஜியம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

குரங்கு அம்மை நோய்ப்பரவல் : முதல் நாடக தனிமைப்படுத்தலை அறிவித்தது பெல்ஜியம்

உலகெங்கும் குரங்கு அம்மை பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக பெல்ஜியம் அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அதாவது, குரங்கு அம்மை நோய்க்குத் தனிமைப்படுத்துதல் விதியை முதன்முதலில் பெல்ஜியம் அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை ஆப்பிரிக்காவில்தான் பொதுவாக இருக்கும். ஆனால், இப்போது இந்த குரங்கு அம்மை ஆப்பிரிக்காவைத் தாண்டி உலகெங்கும் உள்ள 15 நாடுகளில் பரவியுள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இஸ்ரேல் என மொத்தம் 100 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், இந்த பாதிப்பு பெரியளவில் பரவ வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. இந்த குரங்கு அம்மை கொரோனாவை போல மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது.

இதுவரை 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், பெரியளவில் இது பரவும் வாய்ப்பு குறைவு என்றே பெல்ஜியம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment