(எஸ்.ஜே.பிரசாத்)
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள 18 பேர் கொண்ட இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகின்றார்.’
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன, கமில் மிஷார, ஓஷத பெர்னாண்டோ, அஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ், தனஞ்சயடி சில்வா, கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, டினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், சம்மிக்க கருணாரத்ன, சுமிந்த லக்சான், கசுன் ரஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, பிரவீன் ஜயவிக்கிரம, லசித் எம்புல்தெனிய.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் நோக்கி புறப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment