(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால சட்டம் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, விடுமுறையில் உள்ள அனைத்து பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்களையும் உடனடியாக கடமைக்கு சமுகமளிக்குமாறு, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கடமை நேர பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடாக அறிக்கை ஒன்றூடாக இது தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment