மக்களின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம் - மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Sunday, May 8, 2022

மக்களின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானம் - மஹிந்த அமரவீர

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்க அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்ற மட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் இதுவரை காலமும் முன்னெடுக்கப்படவில்லை. மக்களின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் முதலில் 113 பெரும்பான்மை பலத்தை எவ்வாறு உறுதிப்படுத்தவது என்பது குறித்து எதிர்த்தரப்பினர் விளக்கமளிக்க வேண்டும்,

ஒருவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றால் அதனை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் இணைந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில இரு நிபந்தனைகளை ஐக்கிய மக்கள் சக்தியினரிடம் முன்வைத்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளித்தனர்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது சபையில் அறிவுறுத்தினார்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆராயப்படும் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்றுமுன்தினம் போராட்டக் காரர்களுக்கும்,பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் நிலவிய அமைதியற்ற தன்மையினை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நேற்றுமுன்தினம் சபையில் ஒன்றினைந்து வலியுறுத்தியதை தொடர்ந்து சபையில் அமைதியற்ற தன்மை நிலவியது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொர்பில் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் கட்சித் தலைவர் கூட்டத்தின் போது உறுதியான தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் நேற்றுமுன்தினம் சபையில் அறிவித்து பாராளுமன்ற கூட்டத் தொடரை எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment