பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களான இன்றும் (05) நாளையும் (06) பாராளுமன்ற வீதியானது, பொல்தூவ சந்தியிலிருந்து ஜயந்திபுர சந்தி வரையும்; ஜயந்திபுர சந்தியில் இருந்து டென்சில் கொப்பேகடுவ வீதி வரையும் மூடப்பட்டிருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அத்துடன், பாராளுமன்ற வீதிக்கு பிரவேசிக்கும் குறுக்கு வீதிகளும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்தை பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த வீதிகளுக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாற்று வீதிகள் இல்லாத குறித்த பகுதியில் வசிப்போர் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி பயனிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போராட்டங்கள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அவை நடவடிக்கையில் கலந்து கொள்வத்தில் இடையூறு ஏற்படுவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment