பிரதி சபாநாயகர் பதவிக்காக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.
தாங்கள் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு வாக்களிக்கவுள்ளதாக, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பதவியில் ரஞ்சித் சியம்பலாபிட்டியே ஏற்கனவே இருந்த நிலையில் அவர் தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த பதவியிலிருந்து இரு முறை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்த நிலையில் முதலாவது தடவை ஜனாதிபதி அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்காமை காரணமாக, ஏப்ரல் 30ஆம் திகதி வரை குறித்த பதவியில் நீடிப்பதாக அவர் தெரிவித்திருந்ததோடு, மீண்டும் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
குறித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுள்ளதாக தனக்கு கடிதம் கிடைத்துள்ளதாக, நேற்றையதினம் ரஞ்சித் சியம்பலாபிட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புமாறு ஐ.ம.ச. கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமைய, இன்றையதினம் (05) அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றிற்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment