(இராஜதுரை ஹஷான்)
கடுவலை நீதிவானின் பாதுகாப்பு உட்பட நாட்டில் உள்ள சகல நீதிமன்றங்களின் பாதுகாப்பினை உடனடியாக பலப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடுவலை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை நீக்கியமை தொடர்பில் நீதிச் சேவைகள் சங்கத்தினரால் பரிமாற்றிக் கொள்ளப்பட்ட தகவல்களை நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
கடுவலை நீதிவானின் பாதுகாப்பு உட்பட நாட்டில் உள்ள சகல நீதிமன்றங்களின் பாதுகாப்பினை உடனடியாக பலப்படுத்துமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடுவலை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நேற்று திடீரென அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment