பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.
ஏற்கனவே பிரதி சபாநாயகராக பதவி வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் ஜனாதிபதியிடம் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்ள மறுத்திருந்தார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியுடன் தான் பதவியில் இருந்து விலகுவதாக சபையில் அறிவித்தார். அதற்கமைய, அவர் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு புதிதாக ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் போட்டியிட்டனர்.
இதையடுத்து பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக நேற்றையதினம் பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கமைய 148 வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவானார்.
இந்நிலையில் தான் மீண்டும் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளதுடன் தனது இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment