பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வாகனம் மோதியதில் ஒருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, May 5, 2022

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வாகனம் மோதியதில் ஒருவர் பலி

புத்தளம் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (04) இரவு 08.10 மணியளவில் பாலவி - கல்பிட்டி வீதியில் மாம்புரிய பிரதேசத்தில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வாகனத்துடன் குறித்த நபர் மோதியுள்ளார்.

உயிரிழந்தவர் புத்தளம் மணதீவு பகுதியைச் சேர்ந்த சிமியோன் பெனடிக்ட் டிக்சன் (வயது 46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துக்கு உள்ளான நபர் முச்சக்கர வண்டியில் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் அதிவேகமாக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டதுடன், வாகன ஓட்டுனரை கைது செய்ய புத்தளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment