பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக மாட்டார். இன்றோ அல்லது நாளையோ நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவாரென சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவி விலகலை அறிவிப்பாரென சில சமூக வலைத்தளங்கள் நேற்று முன்தினம் தகவல்களை வெளியிட்டிருந்தன.
அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேற்று சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக மாட்டாரென்பதை அவர் இதன்போது உறுதியாக தெரிவித்தார்.
அத்துடன் எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக 3 மொழிகளிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், ஐந்து வேலை நாட்கள் முடியும் வரை விவாதம் நடத்தக் கூடாது எனவும், அதற்குள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதைப் படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment