பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தம்மிடம் கோரவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
பிரதமர் இராஜினாமா செய்யும் எவ்வித எதிர்பார்ப்போ, ஆயத்தமோ இல்லையென அவர் கூறினார்.
பிரதமரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியினால் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பிரதமர் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் ரொஹான் வெலிவிட்ட சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment