பாராளுமன்றப் பகுதியில் ஹொரு கோ கம என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று அமைக்கப்பட்டு எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
பத்தரமுல்லை - பொல்துவ சந்திக்கு அருகில் நேற்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன் பின்னர் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் மாணவர் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவிரவாக தொடர் போராட்த்தை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், கோட்டா கோ கம, மைனா கோ கம போன்று ஹொரு கோ கம என்ற தொனியில் கிராமம் ஒன்றை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீடு செல்லுமாறு வலியுத்தியே இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment