அரச செலவினங்களை குறைக்க வேண்டிய தருணத்தில் அமைச்சின் எண்ணிக்கையை அதிகரிப்பது தவறு : வீழ்ச்சியடைந்துள்ள பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா ? - திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

அரச செலவினங்களை குறைக்க வேண்டிய தருணத்தில் அமைச்சின் எண்ணிக்கையை அதிகரிப்பது தவறு : வீழ்ச்சியடைந்துள்ள பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா ? - திஸ்ஸ அத்தநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள முடியவில்லை. வீழ்ச்சியடைந்துள்ள பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தோற்றம் பெறுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச செலவினங்களை குறைக்க வேண்டிய தருணத்தில் அரசாங்கம் தன் விருப்பம் போல் அமைச்சின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வது தவறானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் எப்பிரச்சினைக்கும் தீரவு காண முடியாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க பிரதராக நியமிக்கப்பட்டுள்ளார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கடந்த வாரம் சமூக வலைத்தளத்திற்கு வழங்கியுள்ள நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்க ராஜபக்ஷர்களின் உறவினர். ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோட்டா கோ கம போராட்டத்திற்கு துரோகமிழைத்துள்ளார் என்றே கருத வேண்டும்.

சமூக கட்டடைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நடைமுறைக்கு சாத்தியமான எத்திட்டங்களும் கிடையாது. அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பணம் அனுப்பலை தவிர்த்து வருகிறார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு புறம்பாக தன் கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்துள்ளமை தவறான செயற்பாடாகும். புதிய தலைமைத்துவத்தின கீழ் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பது பொருத்தமானதாக அமையும்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள முடியவில்லை. வீழ்ச்சியடைந்துள்ள பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகம் தோற்றம்பெறுகிறது என்றார்.

No comments:

Post a Comment