(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விநியோக தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள் பாவனையினை மட்டுப்படுத்தும் நோக்கில் பொதுப் போக்கு வரத்து சேவை விரைவாக மறுசீரமைக்கப்படும் என போக்கு வரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை புகையிரத தலைமையகத்தின் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (26.05.2022) புகையிரத தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடு மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் வீண்விரயத்தை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தனியார் வாகன பயன்பாட்டை தவிர்த்து பொதுப் போக்கு வரத்து சேவையினை ஊக்குவித்தால் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளலாம்.
அரச பொதுப் போக்கு வரத்து சேவையை விரைவாக மறுசீரமைக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தனி வாகன பயன்பாட்டை குறைத்து பொதுப் போக்கு வரத்து சேவையினை ஊக்குவித்தால் அரச பொதுப் போக்கு வரத்து துறை அபிவிருத்தியடையும்.
புகையிரத சேவைத்துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு பொதுக் கொள்கையுடன் செயற்பட வேண்டிய தேவை தற்போது சகல தரப்பினருக்கும் உண்டு என்றார்.
.jpg)
No comments:
Post a Comment