தோட்டத் தொழிலாளர்களுக்கும் 7500 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க வேண்டும் : சதொசவில் பொருட்களை பெற்றுக் கொள்ள விசேட செயற்திட்டம் வேண்டும் - இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 5, 2022

தோட்டத் தொழிலாளர்களுக்கும் 7500 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க வேண்டும் : சதொசவில் பொருட்களை பெற்றுக் கொள்ள விசேட செயற்திட்டம் வேண்டும் - இராதாகிருஸ்ணன்

(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)

சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ள 7500 ரூபா நிவாரண கொடுப்பனவை அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். அத்துடன் சதொச விற்பனை நிலையத்தின் பொருட்களை பெருந்தோட்ட மக்கள் பெற்றுக் கொள்ளும் விசேட செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

306 உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கல்வி அமைச்சர் ரமேஷ் பதிரன முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியுடன், அரசியல் நெருக்கடியும் தீவரமடைந்துள்ளன. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொள்கிறார்கள்.

போதிய வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட மக்கள் தற்போது பொருளாதார நெருக்கடியினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பெருந்தோட்ட மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.

சமுர்த்தி பயனாளர்களுக்கு அரசாங்கம் 75000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளது. சமுர்த்தி பயனாளர்களை காட்டிலும் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால் பெருந்தோட்ட மக்களுக்கும் எவ்வித பாரபட்சமின்றிய வகையில் 7500 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும், பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை என விடயதானத்திற்க பொறுப்பான அமைச்சர் குறிப்பிடுகிறார்.

பெருந்தோட்ட மக்கள் தங்களின் தொழில் கடமைகளை முடித்து விட்டு சதொச விற்பனை நிலையங்களுக்கு செல்லும் போது பொருட்கள் முடிந்து விடுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களை பெற்றுக் கொள்ள விசேட செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா பாரிய ஒத்துழைப்பினை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், இந்திய நிதியமைச்சர் திருமதி சீதா நிர்மலநாதன் ஆகியோருக்கும்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment