சீனாவில் 6 நாட்களாக நீடித்த மீட்பு பணி : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பலி, 10 பேர் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 6, 2022

சீனாவில் 6 நாட்களாக நீடித்த மீட்பு பணி : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பலி, 10 பேர் மீட்பு

சீனாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பலியானதுடன், 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய சீனா பகுதியில் உள்ள சாங்சா நகரில் குடியிருப்புகளுடன் கூடிய வணிக வளாக கட்டிடம் உள்ளது. 6 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் திடீரென கடந்த மாதம் 29 ஆம் திகதி இடிந்து விழுந்தது.

சீட்டு கட்டு போல சரிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இது பற்றி அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இரவு பகலாக இந்த மீட்பு பணி நடந்தது. ராட்சத இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும் இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பரிதாபமாக இறந்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், கட்டிட விபத்து தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment