சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் : தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே விநியோகம் : கையிருப்பில் 15,000 சிலிண்டர்கள் மாத்திரமே - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் : தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே விநியோகம் : கையிருப்பில் 15,000 சிலிண்டர்கள் மாத்திரமே

எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக எரிவாயு விநியோகம் செய்ய முடியாது என்பதால், சமையல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிவாயு இறக்குமதிக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வெள்ளி (13), சனிக்கிழமை (14) எரிவாயு கொண்ட 2 கப்பல்கள் வந்தடையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய 3,500 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவைக் கொண்ட கப்பலொன்று நாளை கொழும்பிற்கு வரவழைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது 15,000 சிலிண்டர்கள் மாத்திரம் கையிருப்பில் உள்ளதாகவும் அவற்றை கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகரங்களில் இன்றையதினம் (09) விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தொழிற்சாலைகளுக்கான எரிவாயுவே கையிருப்பில் உள்ளதாகவும் அவை தொழிற்சாலைகளுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment