(எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பில் 14 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“மைனா கோ கம” மீதான தாக்குதல் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகளும், “கோட்டா கோ கம” மீதான தாக்குதல் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகளும், தாக்குதலுக்கு உள்ளானவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (10) கோட்டா கோ கமவுக்கு கொழும்பு ,மத்தி ஸ்தல தடயவியல் பிரிவினர் வருகை தந்து அழிவுகளை பார்வையிட்டு சாட்சியங்களை சேகரித்தனர்.
No comments:
Post a Comment