குளியாபிட்டி - மாதம்பை வீதியில் கனதுல்ல பிரதேசத்தில் டிபென்டர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (01) பிற்பகல் குளியாபிட்டி - மாதம்பை வீதியில், மாதம்பை திசையிலிருந்து குளியாபிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிர் திசையில் பயணித்த டிபென்டர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றிருந்தது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த, குளியாபிட்டி, குருதல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதான நபர் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
இவ்விபத்தைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் டிபென்டர் வாகனத்தை சேதப்படுத்தி, தீ வைத்திருந்தனர்.
நேற்றைய தினம் (01) டிபென்டர் வாகன சாரதி கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது குறித்த வாகனத்தில் பயணித்த 14 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment