பாராளுமன்றத்தை 10 நாட்களுக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் - News View

About Us

About Us

Breaking

Friday, May 6, 2022

பாராளுமன்றத்தை 10 நாட்களுக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர்

பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அது தொடர்பில் தங்களது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, குறித்த வேளையில் சபாநாயகர் தனது ஆசனத்தில் இல்லாத நிலையில், ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே அவை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

இவ்வேளையில் சபநாயகரை அவைக்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

அதன் பின்னர் அவைக்கு வந்த சபாநாயகர், எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தற்போதுள்ள நிலைமை தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், வெளியில் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாம் வருத்தத்தை தெரிவித்துக்க கொள்ளவதோடு, அது தொடர்பில் பொலிஸ் மாஅதிபரிடம் எதிர்வாரம் அறிக்கை கோருவதாக தெரிவித்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு கோருவதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை எதிர்வரும் மே 17ஆம் திகதி மு.ப. 10.00 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

No comments:

Post a Comment