கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நாளின் (25) பங்குப் பரிவர்த்தனைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய நாளின் பதிவின் அடிப்படையில் S&P SL20 (Standard & Poor's Sri Lanka 20) சுட்டெண் ஆனது 10% இலும் குறைவாக பதிவானதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் ஆரம்பமாகி முற்பகல் 10.30 மணியளவில் S&P SL20 சுட்டெண் 5% இற்கு குறைவாக பதிவானதைத் தொடர்ந்து அது இடைநிறுத்தி வைக்கப்பட்டதோடு, மீண்டும் முற்பகல் 11.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அதற்கமைய, S&P SL20 சுட்டெண் 10% இலும் குறைவாக பதிவானது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பங்குச் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட் இன்றைய நாளுக்கான பரிவர்த்தனை முழுமையாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையானது தமிழ், சிங்கள புதுவருட விடுமுறையைத் தொடர்ந்து, ஏப்ரல் 18ஆம் திகதி முதல் மேலும் 5 வேலை நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கமைய, இவ்வாறு கொழும்பு பங்குச் சந்தை குறித்த தினங்களில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளின் முடிவில்,
ASPI
7,513.85
-621.40
-7.64%
S&P SL20
2,292.32
-331.58
-12.64%
மொத்த பங்குகளின் எண்ணிக்கை 30,220,588
மொத்த புரள்வு 265,387,691.95

No comments:
Post a Comment