பஹ்ரைனுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 2, 2022

பஹ்ரைனுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்

(எம்.மனோசித்ரா)

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கான இரு விமான சேவைகள் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அதற்கமைய யூ.எல்.201 மற்றும் யூ.எல்.202 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கன்ஸ் எயார் லைன்ஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாறு கொழும்பிலிருந்து முன்னெடுக்கப்படும் விமான சேவைகள் மாத்திரமே இடை நிறுத்தப்படுவதாகவும், சர்வதேச விமான சேவைகளில் எவ்வித மாற்றங்களும் முன்னெடுக்கப்பட மாட்டாது.

ஏனைய விமான சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.

பிரிதொரு நிறுவனத்தின் அறிவிப்பிற்கு அமைய இவ்வாறான போலியான செய்திகள் வெளியிடப்படுகின்றன.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அதன் சகல விமான சேவைகளையும் இடைநிறுத்துவதாக பல வெளி தரப்பினரால் வெளியிடப்பட்ட இவ்வாறான செய்திகளால் பயணிகள் ஏதேனும் அசௌகரியத்தினை எதிர்கொண்டிருந்தால் அதற்கு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் கவலை தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் ஏனைய அனைத்து விமான சேவைகளும் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment