தங்காலை பகுதியிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்தை மக்கள் சுற்றி வளைத்து இன்று (04) போராட்டம் மேற்கொண்டனர்.
இதன்போது ஆர்பாபட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.
இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு, ஆட்சியிலுள்ள ராஜபக்ஷ குடும்பமே காரணம் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், நாடு தழுவிய ரீதியில் தற்போது மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், தங்காலை பகுதியிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை மக்கள் இன்று சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
கொழும்பு - கதிர்காமம் வீதியை மறித்த போராட்டக்காரர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாதுகாப்பு பிரிவினரால் முடியாது போயுள்ளது.
போராட்டக்காரர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டு வளாகத்திற்கு செல்ல முயற்சித்துள்ளதை அடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில், அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகத்தை அடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றாலும், தங்காலை பகுதியில் அங்காங்கே போராட்டங்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment