இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) நிராகரித்துள்ளது.
இடைக்கால அரசாங்கத்தில் நாம் இணைய மாட்டோமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி உள்ளிட்ட ஒட்டு மொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதலில் தனது பதவி விலகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பது எவ்வாறு என்பது விவாதிக்கலாம். அதன்போது தேர்தல் நடத்தி, பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசை அமைக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment