(எம்.மனோசித்ரா)
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மின் உற்பத்திக்கான டீசல் தொகை கிடைக்கப் பெற்றதையடுத்து அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பதில் முகாமையாளர் ரொஹாந்த அபேசேகர தெரிவித்துள்ளார்.
இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் (ஐ.ஓ.சி.) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய , மின் உற்பத்திக்காக 6000 மெட்ரிக் தொன் டீசல் பெற்றுக் கொள்ளப்பட்டது.
அதில் 1500 மெட்ரிக் தொன் டீசல் தொகை நேற்றையதினம் கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்டதையடுத்து அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ள சோஜிஸ்ட் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான எரிபொருளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment